கொதிக்கும் நீரில் வெந்து கொண்டிருந்த மகன்: கடைக்கு சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

உக்ரைன் நாட்டில் கொதிக்கும் நீரில் தவறி விழுந்த 2 வயது சிறுவனை காப்பாற்ற மருத்துவர்கள் பெரிதும் போராடி வருகின்றனர்.

உக்ரைன் நாட்டை சேர்ந்த இவான்னா என்பவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவர் துணிகளை துவைப்பதற்காக 40 லிட்டர் தண்ணீரை கொதிக்கை வைத்து அதனை தரையில் இறக்கி வைத்துவிட்டு கடைக்கு சென்றுள்ளார்.

இதற்கிடையில் அவருடைய 2 வயது மகன் இவான், கொதிநீர் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திற்குள் விழுந்துள்ளான்.

பக்கத்து வீட்டில் அமர்ந்திருந்த இவானின் தந்தை, அலறல் சத்தம் கேட்டு வேகமாகா வீட்டிற்கு ஓடிவந்துள்ளார். நிலைமையை புரிந்து கொண்ட அவர், உடனடியாக மகனை மீட்டு குளிர் தண்ணீரை உடலில் ஊற்றியுள்ளார்.

பின்னர் வேகமாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றிருக்கிறார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் 70 சதவீத காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுவனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து இவானின் தாய் கூறுகையில், ரொட்டி வாங்குவதற்காகா கடைக்கு சென்றுவிட்டு திரும்பும் பொழுது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த என்னுடைய மூத்த மகன் கவனிக்காமல் இருந்துள்ளான். வீட்டிற்குள் விளையாடிக்கொண்டிருந்த இவான், கவனக்குறைவாக நீர் வைக்கப்பட்டிருந்த பானையில் தவறி விழுந்திருக்க வேண்டும்.

என் மகனுடன் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வருகிறேன். உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் குறித்து மருத்துவர்கள் எதுவும் கூறவில்லை. என் இதயம் உடைந்து விட்டது. இந்த சம்பவத்திற்கு என்னை என்னாலே மன்னித்துக்கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்