ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள கதி

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

ஐஎஸ் பயங்கரவாதிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி குழந்தை பெற்றெடுத்த யாஸிதி பெண்களை எங்கள் சமூகத்தில் சேர்த்துக்கொண்டாலும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளை யாஸிதி சமூகம் ஏற்றுக்கொள்ளாது என அதன் தலைவர்கள் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு அடக்கப்பட்டாலும் 2015 ஆம் ஆண்டு அதிகளவில் சின்ஜார் பிரதேசத்தில் சிறைபிடிக்கப்பட்ட யாஸிதி பெண்களில் தற்போது வரை 3 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் அடிமைகளாகவும், வீட்டு வேலை செய்துகொடுப்பதற்கும், சந்தைகளில் விற்பனை செய்வதற்கு மட்டுமே ஆயிரக்கணக்கான யாஸிதி பெண்களை ஐஎஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்திக்கொண்டனர்.

இதில் ஐஎஸ் பயரங்கவாதிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான யாஸிதி பெண்கள் கர்ப்பமடைந்து குழந்தையும் பெற்றெடுத்துள்ளனர். தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளோடு இப்பெண்கள் தங்கள் பகுதிக்கு திரும்பியுள்ள போதிலும் இவர்களை ஏற்றுக்கொள்ளும் சமூகம் குழந்தைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது விவாதப்பொருளாகியுள்ளது.

யாஸிதி பெண்களை ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு பிறந்த குழந்தைகளை எங்கள் சமூகம் ஏற்றுக்கொள்ளாது என யாஸிதி தலைவர்கள் தெரிவித்துள்ளதால், அக்குழந்தைகள் அனாதை இல்லங்களுக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

யாஸிதி சமூகத்தின் இந்த முடிவு குறித்து ஈராக் மற்றும் கத்தாரின் மனித உரிமை ஆய்வாளர் Belkis Wille தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, யாஸிதி சமூகத்தை நினைத்து வெட்கப்படுகிறேன். ஐஎஸ் பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் சந்தித்துள்ள வலி மிகவும் கொடியது.

தற்போது, இப்படி ஒரு முடிவு அவர்களை கொடுமைக்குள்ளாக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்