5 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக வெளியான ஐ.எஸ் தலைவனின் வீடியோ! வெளியான தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவனான அபு பக்கர் அல் பகாடியின் வீடியோவை அந்தமைப்பு வெளியிட்டுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதி அமைப்பின் தலைவர் என்றழைக்கப்படும் Abu Bakr al-Bagdadi என்ற 47 வயது நபர் கடந்த 2014-ஆம் ஆண்டு வடக்கு இராக்கின் மொசூல் பகுதியில் பொதுவெளியில் தென்பட்டான்.

அப்போது அவன் இஸ்லாமியர்கள் அனைவரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிற்கு அடி பணிய வேண்டும் என்று கூறியிருந்தான்.

இதைத் தொடர்ந்து அதன் பின் அவனைப் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகமல் இருந்த போது, அவன் இறந்துவிட்டான் என்றும் அவன் இருந்த பகுதியில் நடந்த தாக்குதலில் காயமடைந்துவிட்டான் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு பின் தற்போது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இது புதிய வீடியோவா அல்லது பழைய வீடியோவா என்று தெரியவில்லை. இதை ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதில் Abu Bakr al-Bagdadi அங்கிருக்கும் சிலரிடம் பேசுவது போல் தெரிகிறது. ஆனால் பேசும் நபர்கள் யாரும் அந்த வீடியோவில் தெரியவில்லை.

கடந்த மார்ச் மாதம் 23-ஆம் திகதி ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை அமெரிக்க படையினர் கைப்பற்றினர். இப்போது மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஐ.எஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்