போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த 10 அடி நீள மலைப்பாம்பு: 2 மில்லியன் பேர் பார்வையிட்ட வீடியோ!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பிரேஸில் நெடுஞ்சாலை ஒன்றில் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று இரைதேடி புறப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

10 அடி நீளமும் 66 பவுண்டுகள் எடையும் கொண்ட மலைப்பாம்பு ஒன்று சாலையின் குறுக்கே பயணித்ததால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

வெளியாகியுள்ள வீடியோவில் அந்த மலைப்பாம்பு சாலையின் ஒரு பக்கம் இருந்து புறப்பட்டு, சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரையும் தாண்டி ஏறி மறுபக்கம் செல்வதையும், ஒரு கட்டத்தில் கார் ஒன்று பாம்பைக் கண்டு ரிவர்ஸில் செல்வதையும் காணலாம்.

அந்த வீடியோவை இணையத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். சாலையைக் கடக்கும் அந்த பாம்பை பலர் வீடியோ எடுத்ததோடு, சிலர் அந்த பாம்புடன் செல்பியும் எடுத்துக் கொண்டனர்.

உள்ளூர் உயிரியலாளர் ஒருவர், அந்த மலைப்பாம்பு இரை தேடி, சாலையின் ஒரு பக்கம் இருந்து மறுபக்கம் பயணித்ததாக தெரிவிக்கிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்