உலகிலேயே வேகமாக கடல்நீரில் மூழ்கும் நகரம்.. புதிய தலைநகரை தேடும் இந்தோனேசியா!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவுக்கு பதிலாக புதிய தலைநகரை அறிவிக்க அந்நாடு முடிவு செய்துள்ளது.

ஜகார்த்தா நகரம் உலகிலேயே வேகமாக கடல்நீரில் மூழ்கும் நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாடு காரணமாக, 2005ஆம் முதல் 2050ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஜகார்த்தா கடலில் முழுமையாக மூழ்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அத்துடன் அப்பகுதியில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளதால், இந்தோனேசியாவின் தலைநகரை மாற்றுவதற்கு ஜனாதிபதி ஜோகோ விடோடோ ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுவரை இந்தோனேசியாவின் புதிய தலைநகர் பற்றிய எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. எனினும், புதிய தலைநகருக்காக பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

அவற்றில், போர்னியோ தீவில் உள்ள காளிமாண்டன் மாகாணத் தலைநகரான பாலங்கராயா தான், பரிசீலிக்கப்படும் நகரங்களின் பட்டியலில் முதலில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்