ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு சிம்ம சொற்பனமாய் இருந்த அபுபக்கர் அல் பாக்தாதி யார்?

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் என கூறப்படும் அபுபக்கர் அல் பாக்தாதி 5 வருடங்களுக்கு பின்னர் வீடியோவில் தோன்றி ஐ.எஸ் வசம் இறுதியாக இருந்தா பாகூஸ் நகரத்தை இழந்துவிட்டதால் பழி தீர்ப்போம் என சூளுரைத்த வீடியோ வைரலாகியது.

ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு சிம்ம சொற்பனமாய் இருந்த அபுபக்கர் சிரியாவில் நடந்த விமான தாக்குதலில் காயமடைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டார் என்றும் இறந்துவிட்டார் என இருவேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இவர் மீண்டும் வீடியோவில் உடல் நலத்துடன் தோன்றியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவர் கடைசியாக 2014 ஆம் ஆண்டு பொதுமக்கள் மத்தியில் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதும் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ரகசியமாக வைத்துக்கொள்ளும் அபுபக்கர் அல் பாக்தாதி குறித்த தகவல்கள் இதோ,

அபுபக்கர் அல் பாக்தாதி முக்கியத்தேவை இருந்தால் மட்டுமே பொதுவெளியில் தோன்றி பிறருடன் கலந்துரையாடுவார்.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் விசுவாசமானவர்களுக்கு மட்டுமே மேலதிரகாரத்தில் இருப்பவர்களுடன் தொடர்பு இருக்கும், இதனால் அந்த அமைப்பில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அபுபக்கர் குறித்த விவரங்கள் தெரியும்.

சிரியாவுக்கும் இராக்குக்கும் இடையே உள்ள எல்லைப்புறப் பகுதிதான் அபுபக்கருக்கு மிகவும் பாதுகாப்பான பகுதி.

அபுபக்கரை கண்டுபிடிக்க அமெரிக்கா சிறப்பு படைகளை உருவாக்கியிருந்தாலும் அவர் தங்கியிருக்கும் நிலப்பரப்பு மிகவும் பாதுகாப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடியலாம்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்