2 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்த தந்தை: 21 ஆண்டுகளுக்கு பின்னர் டிஎன்ஏ சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அமெரிக்காவை சேர்ந்த நபர் நைஜீரியா பெண்ணை திருமணம் செய்யாமல் அவருடன் வாழ்ந்து வந்த நிலையில் அவருக்கு பிறந்த 2 குழந்தைகளுக்கு தான் தந்தை இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

நைஜீரியாவை சேர்ந்த இளம்பெண்ணான ரீட்டா என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், காலையிலேயே வேதனையான ஒரு செய்தி எனக்கு வந்தது.

அமெரிக்காவை சேர்ந்த என்னுடைய நண்பர் நைஜீரியாவை சேர்ந்த பெண்ணுடன் பழகி வந்தார்.

அடிக்கடி நைஜீரியாவுக்கு அவர் சென்று பெண்ணை சந்தித்து வந்தார். இதை தொடர்ந்து இரண்டு குழந்தைகளை அப்பெண் பெற்றெடுத்தார். இது அமெரிக்கருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

அதில் ஆண் பிள்ளைக்கு தற்போது 21 வயதாகிறது, பெண் பிள்ளைக்கு 17 வயதாகிறது.

இந்நிலையில் இருவரும் நைஜீரியாவில் வசிக்கும் நிலையில் அவர்களை அமெரிக்காவில் குடிபெயர வைக்க அவர் தந்தை முடிவெடுத்தார்.

இதையடுத்து அமெரிக்க தூதரகம் மூலம் இரண்டு பிள்ளைகள் மற்றும் அவரின் தந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் அந்த இரண்டு குழந்தைகளும் அவருக்கு பிறக்கவில்லை என்பதை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

அதாவது வேறு நபருடன் அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் அந்த குழந்தைகளுக்கு தந்தை அமெரிக்கர் தான் என அப்பெண் பொய்யாக கூறியுள்ளார்.

இத்தனை ஆண்டுகளாக இப்படி அந்த அமெரிக்கரை ஏமாற்றியது பெரிய குற்றமில்லையா.

கடவுளே என் நண்பருக்கு தைரியத்தை கொடுத்து சமாதப்படுத்துங்கள், அவர் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிள்ளார் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers