3 மனைவிகள்... 7 குழந்தைகள்: தனது பாதுகாப்பு அதிகாரியை நான்காவது திருமணம் செய்த தாய்லாந்து அரசர்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

தாய்லாந்து அரசர் Vajiralongkorn தனது பாதுகாப்பு அதிகாரியை நான்காவதாக திருமணம் செய்துகொண்ட செய்தியை அரண்மனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

விமான பணிப்பெண்ணான சுதிதாவை 2014 ஆம் ஆண்டு தனது பாதுகாப்பு அதிகாரியாக அரசர் நியமித்தார்.

இவர்கள் இருவரும் பொதுஇடங்களில் சுற்றிதிரிந்த புகைப்படங்கள் வெளியான போதிலும், இருவரும் தங்கள் இருவருக்குமான உறவை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட சுதிரா, அரசரின் நம்பிக்கைக்குரியவராகி தற்போது அவரது மனதில் இடம்பிடித்து தாய்லாந்து நாட்டின் ராணியாகியுள்ளார்.

தனது தந்தை Bhumibol Adulyadej 2016 ஆம் ஆண்டு உயிரிழந்ததையடுத்து, வருகிற 4 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக தாய்லாந்தின் நாட்டின் அரசராக முடிசூடவிருக்கிறார் Vajiralongkorn.

70 ஆண்டுகள் கழித்து நடக்கும் முடிசூட்டு விழா என்பதால் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதற்கிடையில் தான் பாதுகாப்பு அதிகாரியை அரசர் திருமணம் செய்துகொண்ட செய்தியை அரண்மனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சுதிரா தாய்லாந்து நாட்டின் அரசியாகிறார். Vajiralongkorn - க்கு ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி விவாகரத்தாகியுள்ளது. அவர்கள் மூலம் 7 குழந்தைகள் அரசருக்கு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்