வெளிநாட்டிலிருந்து விமானத்தில் வந்த தமிழர்கள் செய்த அதிர்ச்சி செயல்... விமானநிலையத்தில் மடக்கி பிடித்த அதிகாரிகள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

மலேசியாவிலிருந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரிடமிருந்து சுமார் 31 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை சுங்கவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர். இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து அடிக்கடி தங்கம் கடத்தப்படுவதை அதிகாரிகள் கண்டுபிடித்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று திருச்சி வழியாக விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 3 பயணிகளிடம் இருந்து 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் சிவகங்கையை சேர்ந்த தமீம் அன்சாரியிடன் 7.66 லட்சம் ரூபாய் மதிப்பிலான 240 கிராம் தங்க செயினும், முகமது நியாஸிடம் 11.33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 355 கிராம் செயினும், அலியிடமிருந்து 11.90 லட்ச ரூபாய் மதிப்பிலான 373 கிராம் செயினும் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்களை விரானை நடத்தியதில் மூவரும் கமிஷனுக்காக தங்கம் கடத்தியது தெரிய வந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்