ஜப்பானின் புதிய ராணியின் புன்னகைக்குப் பின்னால் இத்தனை சோகங்களா?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஜப்பானின் புதிய மன்னராக நருஹிடோ பதவியேற்றுள்ள நிலையில், அவரது மனைவி குறித்த சில செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

மன்னரின் அருகில் வெண்ணிற நீண்ட கவுன் அணிந்து, தலையில் வைர கிரீடம் பதித்து புன்னகைக்கும் ஜப்பானின் புதிய ராணி Masakoவின் கதையைக் கேட்டால், அந்த அழகிய புன்னகையின் பின்னால் இத்தனை சோகங்களா என்று எண்ணத்தோன்றுகிறது.

கடந்த சுமார் 20 ஆண்டுகளாக அபூர்வமாகத்தான் பொதுமக்கள் Masakoவைப் பார்த்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளுக்கு நருஹிடோ அதிகாரப்பூர்வமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது கூட Masako அவருடன் சென்றதில்லை.

மன அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மனச்சோர்வால் 2004ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட Masako, ராஜ வாழ்வின் அழுத்தங்களை சமாளிக்க முடியாமல் துன்புற்றதை பெரும்பாலானோர் அறிவர்.

Masako நருஹிடோவின் நிச்சயதார்த்தம் ஆன உடனேயே பத்திரிகைகளும் பொதுமக்களும் மிகத் தீவிரமாக அவரது ஒவ்வொரு அசைவையும் பின் தொடர ஆரம்பித்தார்கள்.

அங்கு தொடங்கிய பிரச்சினைதான் 17 ஆண்டுகளுக்குமுன் பொது வாழ்க்கையை விட்டு Masako விலக காரணமாக இருந்தது என்கிறார்கள் அவரை அறிந்த பலரும்.

பொதுவாக மன்னருக்கு ஏற்றவராக ஒரு பெண் இல்லையென்றால் அவர் மீது விமர்சனங்கள் வருவது இயற்கைதான், ஆனால் Masakoவின் விடயத்தில் இது தலைகீழாக நடந்தது.

ராஜ குடும்பம் தங்கள் இளவரசர் நருஹிடோவுக்கு ஒரு புத்திசாலியான, ஹீல்ஸ் அணிந்தாலும் 5 அடி 4 அங்குல உயரம் இருக்கும், 25 வயது மிகாத ஒரு இளம்பெண்ணை தெடிக்கொண்டிருக்க, Masakoவுக்கு அப்போதே 27 வயது.

அத்துடன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று ஜப்பான் வெளியுறவுத்துறையில் பணியாற்றினார் Masako.

5 அடி 4 அங்குலத்திற்கு சற்று உயரமான Masako, ஹீல்ஸ் அணிந்தால் நருஹிடோவை விட உயரமாக இருந்தார்.

இதற்கு முன்னிருந்த இளவரசிகள் யாரும் இப்படி இருந்ததில்லை என்பதால் Masako மிகவும் தனிப்பட்டு தெரிந்தார்.

ஒருவழியாக திருமணம் முடிய, பின்னர் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் பேசிய Masako, தனது கணவரை விட 30 விநாடிகள் அதிகம் பேசியதற்காக பத்திரிகைகள் அவரை வறுத்தெடுத்தன.

எல்லாவற்றிற்கும் மேல் ஒரு ராஜ குடும்பத்துப்பெண், ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும்.

ஆனால் Masakoவுக்கு ஒரு கருச்சிதைவு ஏற்பட, அதற்குப்பின் பொதுமக்கள் பார்வையிலிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். என்றாலும் ஆண் வாரிசை பெற்றெடுக்கும் அழுத்தம் குறையவில்லை.

பெருத்த ஏமாற்றமாக 2001ஆம் ஆண்டு Masako ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். எனவே அவரது வாரிசு அரியணையேற முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது.

இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியிலும், காதலிக்கும்போது, என்ன நிலைமை வந்தாலும் உன்னை கைவிட மாட்டேன் என நருஹிடோ சொன்ன வார்த்தைகளை அவர் ஒருபோதும் நிறைவேற்றத்தவறவில்லை.

ஒரு சில விமர்சனங்களைத் தவிர்த்து, எப்போதும் Masakoவுக்கு ஆதரவாக நின்றார் அவரது கணவர்.

சொல்லப்போனால் 2004ஆம் ஆண்டு தன் மனைவியை விமர்சிப்பவர்களை கடுமையாக சாடினார் அவர்.

இந்நிலையில் நருஹிடோ மன்னராக பதவியேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து மெதுவாக பொதுவாழ்க்கைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார் Masako.

தற்போது, என்னாலான சேவையை மக்களுக்கு செய்வேன், முன்பை விட அதிக பணிகளை செய்வேன், கொஞ்சம் கொஞ்சமாக என்று கூறியுள்ளார் Masako.

என்றாலும், Masako தனது மருத்துவ சிகிச்சையை தொடர்வது மிகவும் அவசியம் என்று அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்