ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இருந்து மீண்ட ஒரு பெண்ணின் போராட்டம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

அயர்லாந்தை சேர்ந்த முன்னாள் பெண் இராணுவ வீரர் லிசா ஸ்மித் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்ததன் மூலம் தான் தவறு செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

அயர்லாந்து இராணுவத்தில் பயணியாற்றிய முன்னாள் இராணுவ வீரர் லிசா ஸ்மித் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நாட்டை விட்டு வெளியேறி ஐஎஸ் பயங்கரவாதியை திருமணம் செய்துகொண்ட நிலையில் இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

கணவர் இறந்துவிட்ட நிலையில் தற்போது தனது மகளுடன் சிரியாவில் உள்ள பாக்கவுஸ் முகாமில் வசித்து வருகிறார்.

எனது நாட்டை விட்டு வெளியேறி சிரியாவுக்கு சென்று ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்தது நான் செய்த மிகப்பெரிய தவறு. நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. பயங்கரவாத அமைப்பில் இணைந்ததற்கு தற்போதும் வருதப்படுகிறேன், ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை நான் அறிவேன்.

தற்போது நான் ஒரு விதவை, நான் ஐஎஸ் அமைப்பில் இணைந்தபின்னர் யாரையும் கொலை செய்யவில்லை, நானும் எனது மகளும் அயர்லாந்து குடிமகன்கள் ஆவோம். ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்தது தவறு என்று நான் உணர்ந்தேன், அதனால் அப்போது என்னால் அதிலிருந்து வெளிவரமுடியாமல் தவித்தேன்.

தற்போது சிரிய முகாமில் இருக்கும் நான் எனது சொந்த நாட்டிற்கு செல்ல விரும்புகிறேன், என்னால் யாருக்கும் எவ்வித பிரச்சனையும் வராது, நான் ஒரு நல்ல அண்டைவீட்டு நபராகவும் மற்றும் நல்ல நண்பராகவுமே இருப்பேன்.

இதுவரை ஒரு துப்பாக்கி கூட நான் பயன்படுத்தியது கிடையாது, பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள என கணவர் கேட்டுக்கொண்டபோதிலும் நான் பயன்படுத்தவில்லை என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்