ஏவுகணையை தாக்கி அழித்த வடகொரியா! தென் கொரியா வெளியிட்ட தகவலால் பரபரப்பு

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

குறுகிய தூர ஏவுகணையை வடகொரியா தாக்கி அழித்ததாக தென் கொரியா தகவல் வெளியிட்டுள்ளது.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இருவரும், கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அப்போது எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், குறுகிய தூர ஏவுகணை ஒன்றை வடகொரியா தாக்கி அழித்துள்ளதாக தென்கொரியா தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தென்கொரியா தரப்பில் கூறுகையில்,

‘கிழக்கு கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத குறுகிய தூர ஏவுகணையை வடகொரியா தாக்கி அழித்துள்ளது. அமெரிக்கா-வடகொரியா இடையே அணு ஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுகளில் ஏற்பட்ட வெறுப்பின் வெளிப்பாடாக, இந்தத் தாக்குதலை வடகொரியா நடத்தி இருக்கலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து தென்கொரியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை அந்த ஏவுகணை எந்த நாட்டைச் சேர்ந்தது என்று தெரியவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers