10 வயது ஆசிய சிறுமிக்கு 40 வயது நபருடன் நடந்த திருமணம்... தந்தையின் இரக்கமற்ற செயல்... சிறுமி கதறி அழுத வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானை சேர்ந்த 10 வயது சிறுமியை 40 வயதான நபர் திருமணம் செய்து கொண்ட நிலையில் சிறுமி கதறி அழுத வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷிகார்பூர் நகரை சேர்ந்தவர் முகமது சோமர் (40). இவருக்கும் 10 வயது சிறுமிக்கும் இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் விருப்பமில்லாத சிறுமி அழுத நிலையில் இருந்தார்.

இது குறித்து நபர் ஒருவர் பொலிஸ் புகார் அளித்த நிலையில் திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் பொலிசார் வந்து சிறுமியை மீட்டு முகமதை கைது செய்தனர்.

விசாரணையில் சிறுமியின் தந்தைக்கு ரூ. 2,50,000 பணத்தை கொடுத்து மயக்கி முகமது திருமணம் செய்தது தெரியவந்தது.

பொலிசார் சிறுமியை மீட்ட பின்னரும் அவர் அழுதபடியே இருந்தார்.

பொலிசார் இது குறித்து முகமதிடம் விசாரித்த போது சிறுமிக்கு 17 வயது என அவர் தந்தை தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.

இதையடுத்து தலைமறைவாக உள்ள சிறுமியின் தந்தை மற்றும் திருமண தரகரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers