தனது திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாக இருந்தவரையே இரண்டாம் திருமணம் செய்த மனைவி... துடித்து போன கணவன்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நைஜீரியாவில் மனைவியை, தனது திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாக இருந்தவர் திருமணம் செய்து கொண்டது கணவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நைஜீரியாவை சேர்ந்தவர் ஷோலா. இவருக்கும் மரியன் என்ற பெண்ணுக்கும் கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த சில மாதங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் பின்னர் சின்ன விடயங்களுக்கு எல்லாம் மரியன் தனது கணவர் ஷோலாவுடன் சண்டை போட தொடங்கினார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கணவரை பிரிந்து மரியன் தனியாக சென்றுவிட்டார்.

இந்நிலையில் கடந்த மாதம் 27ஆம் திகதி ஷோலாவுக்கு போன் வந்தது.

அதில் பேசிய நபர், ஷோலாவின் மனைவி மரியன் வேறு நபரை திருமணம் செய்து கொண்டுவிட்டதாக கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஷோலா இது குறித்து விசாரித்த போது, தனது திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாக இருந்த நபரை தான் தனது மனைவி மரியன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என அறிந்தார்.

இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் ஷோலா. அதாவது தன்னிடம் விவாகரத்து பெறாமலேயே இரண்டாம் திருமணம் செய்துள்ளார் மரியான்.

இது சட்டத்தை மீறிய செயலாகும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers