41 பேர் பலி..... வெடித்து சிதறிய விமான இன்ஜின்: திக் திக் நிமிடத்தின் வீடியோவை வெளியிட்ட பயணி

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள ஷெர்மெட்யவோ விமான நிலையத்தின் ஓடு பாதையில் விமானத்தின் என்ஜின் தீப்பிடித்து எரிந்ததில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

Aeroflot Superjet வகை விமானம் புறப்பட்டவுனயே தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் உடனடியாக தரையிறங்குமாறு எச்சரிக்கை விடப்பட்டது.

விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியதும், ஓடுபாதையில் அதன் இஞ்சின் தீப்பிடித்து எரிந்ததில், 41 பேர் உயிரிழந்துள்ளனர் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

78 பயணிகள் மற்றும் 5 விமானப் பணியாளர்கள் அந்த விமானத்தில் இருந்தனர்.

விமானத்தில் உள்ளே இருந்த பயணி ஒருவர் விமானம் தீப்பிடித்து எரிந்ததை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

பயணி ஒருவர் கூறியதாவது, நான் விமானத்தில் இன்ஜின் முன்னால் உட்காந்திருந்தேன், திடீரென எல்லாம் உருக்கிப்போனது. இதனால் கார்பன் டை ஆக்ஸைடு விமானத்தில் உள்ளே உள்ளிழுக்கப்பட்டதால் அவரச கால கதவினை திறந்து தப்பிக்க முயன்றேன்.

ஆனால், முடியாத காரணத்தால் விமானத்தில் இருந்து குதித்து கீழே தப்பித்தேன் என கூறியுள்ளார்.

பயணிகள் 55 நொடிகளில் பயணிகளை வெளியேற்றினாலும், தங்களது உடமைகளை எடுப்பதற்கு பயணிகள் தாமதப்படுத்தியதால் சிரமம் ஏற்பட்டது என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers