காட்டுத் தீ போல் மள மளவென எரிந்த விமானம்... உயிர் பிழைப்பதற்காக மேலிருந்து குதித்து ஓடிய பயணிகளின் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் தரையிரங்கும் போது தீடீரென்று தீப்பற்றி எரிந்த விமானத்தில், பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக விமானத்தின் அவசர வழியாக குதித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிலிருந்து புறப்பட்ட சூப்பர் ஜெட் 100 என்ற பயணிகள் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிரக்கப்பட்டு, ஓடு தளத்தில் ஓடிய போது திடீரென்று விமானத்தின் பின்பகுதி தீப்பற்றியதால் 41 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

புறப்பட்ட சில நிமிடங்களிலே இந்த விபத்து ஏற்பட்டதால், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விமானம் புறப்பட்ட போது, மோசமான வானிலை இருந்ததாகவும், அப்போது ஏற்பட்ட பயங்கர இடி காரணமாக தீப்பற்றியதாகவும் பயணிகள் சிலர் கூறியுள்ளனர்.

இருப்பினும் இதற்கான உண்மை காரணம் என்ன? என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விபத்தின் போது, விமானத்தின் அவசர வழி உடனடியாக திறக்கப்பட்டது. அப்போது விமானத்தில் இருந்த பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றி கொள்வதற்காக அதிலிருந்து குதித்து ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி விமானம் தரையிறங்கும் போது மீண்டும் மேல எழும்பி, கீழே தரையிறங்க முற்பட்ட போது, தீ பற்றிய வீடியோவும் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers