விமானியை காப்பாற்ற கொழுந்து விட்டெரியும் விமானத்திற்குள் நுழைந்த சக விமானி: வெளியாகியுள்ள புதிய வீடியோ!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
374Shares

மின்னல் தாக்கியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டு 41 பயணிகளை பலி கொண்ட ரஷ்ய விமானத்தின் விமானியைக் காப்பாற்றுவதற்காக, விமானத்தின் சக விமானி பற்றியெரியும் விமானத்திற்குள் நுழையும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

விமானம் பற்றியெரிந்ததும் பல பயணிகள் அவசர வழியாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தின் சக விமானி ஒருவரும் அதேபோல் அவசர வழியாக தப்பியிருக்கிறார்.

ஆனால் அதற்கு பின்தான், விமானத்தின் விமானி இன்னமும் விமானத்திற்குள்ளேயே சிக்கியிருப்பதை அறிந்த அவர், விமானியைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் விமானத்திற்குள் ஏறும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அவசரமாக தரையிறக்கப்பட்டு தீப்பிடித்த விமானத்திலிருந்து Maxm Kuznetsov (36) என்ற பெயருடைய அந்த சக விமானி குதித்து தப்பியிருக்கிறார்.

அப்போது அவர் ஒரு பயணியை மீட்டதாகவும், விமானத்தின் சில முக்கிய ஆவணங்களை மீட்டுக் கொண்டு வந்ததாகவும் மாஸ்கோ பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விமானத்தின் விமானியாகிய Pilot Denis Evdokimov(42)இன் தந்தை தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், விமானத்தின் விமானியாகிய தனது மகனை Kuznetsov மீட்டதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் எப்படி விமானம் அவசரமாக தரையிறக்கப்படுவதற்கும் அதன் மூலம் நடைபெற்ற தீ விபத்துக்கும் மின்னல் காரணமாக இருந்தது என்பது குறித்து ரஷ்ய விசாரணை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்