அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போர்! உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படுமா?

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போரால், உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று சர்வதேச நிதியமான ஐ.எம்.எஃப் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்கா-சீனா நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் ஆரம்பித்தது. அதாவது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரியை விதித்தது.

இந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மீண்டும் வரி அதிகரிக்கப்பட்டது. இதற்கு சீனாவும் பதிலடி கொடுத்தது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சீனா வரியை அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சீனாவின் நியாமற்ற ஏற்றுமதிக் கொள்கையால் அமெரிக்க நலன்கள் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். அத்துடன் சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அவர் உயர்த்தினார்.

சீனாவும் டிரம்பின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கூடுதல் வரியை விதித்தது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டியன் ஸ்கார் இது குறித்து கூறுகையில்,

‘இது உலகப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...