சங்கிலியால் 4 ஆண்டுகள் பிணைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட சிறுவன்: தாயார் கூறிய அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

டொமினிக்கன் குடியரசு நாட்டில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக சங்கிலியால் பிணைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட சிறுவனை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

டொமினிக்கன் குடியரசு நாட்டின் Monte Plata மாகாணத்திலேயே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தொடர்புடைய குடியிருப்புக்கு சென்ற அதிகாரிகள் அந்த சிறுவனை மீட்டுள்ளனர்.

கால்களில் சங்கிலியால் பிணைத்த நிலையில் மன நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் கடந்த நான்கு ஆண்டுகளாக துன்புறுத்தப்பட்டு வந்துள்ளான்.

தற்போது 5 வயதேயாகும் அந்த சிறுவனை, தங்களால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை என்பதாலும், மன நலம் பாதிக்கப்பட்டதால் தங்களின் கட்டுப்பாட்டில் சிறுவன் இருப்பதில்லை என்பதாலையே சங்கிலியால் பிணைத்ததாக சிறுவனின் தாயார் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

தற்போது மீட்கப்பட்ட சிறுவன் குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளான். மட்டுமின்றி போதிய மருத்துவ உதவியும் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

சிறுவனின் தாயார் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தமது 85 வயது கணவரை விவாகரத்து செய்துள்ளார்.

அதன் பின்னர் தொழில் ஏதும் இல்லாத இவர் இன்னொரு நபருடன் திருமணம் செய்துகொள்ளாத உறவில் இருந்து வந்துள்ளார். ஆனால் அந்த நபர் இவரை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

மட்டுமின்றி அந்த நபருக்கு பயந்து இவர் தமது மன நலம் பாதிக்கப்பட்ட மகனை கண்டுகொள்வதில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் விசாரணை அதிகாரிகளுக்கு அவரது விளக்கத்தில் நம்பிக்கை இல்லை எனவும், தொடர்ந்து அவரை விசாரணைக்கு உட்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்