உடல் வலிமைக்காக அணிலின் உடல் பாகங்களை சமைக்காமல் பச்சையாக உண்ட தம்பதி.... நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

மங்கோலியாவில் அணில் இனத்தை சேர்ந்த விலங்கின் உடல் பாகங்களை சமைக்காமல் பச்சையாக உண்ட தம்பதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மங்கோலியா நாட்டில் வசிக்கும் சிலர் அணிலை சமைக்காமல் பச்சையாக உண்டால் உடல் வலிமை பெறும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் ஆவர்.

மங்கோலியா மற்றும் ரஷ்யாவின் எல்லைப்பகுதியில் சகானூர் எனும் சிறிய நகரம் உள்ளது. இந்நகரத்தில் வசிக்கும் தம்பதி கடந்த வாரம், மர்மூத் என்னும் ஒரு வகை அணிலை பிடித்து சமைக்காமல் அதன் சிறுநீரகம், வயிற்றுப்பகுதி, பித்தப்பை ஆகியவற்றை உண்டனர்.

இதையடுத்து அவர்களுக்கு உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு செல்லும்போது இருவருக்கும் பிளேக் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர் இரண்டு தினங்களில் கணவர் இறந்தார். மனைவி தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கடந்த மே 1 அன்று அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers