தொப்புள் கொடி கூட அகற்றப்படாமல் குப்பையில் வீசப்பட்ட குழந்தை: தாயை கைது செய்த பொலிசார்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சீனாவில் குப்பை அகற்றும் ஊழியர் ஒருவர் குப்பைகளுக்கிடையில் தொப்புள் கொடி கூட அகற்றப்படாமல் கிடந்த குழந்தை ஒன்றைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்தார்.

மருத்துவர்களுடன் வந்த பொலிசார் அந்த குழந்தையை மீட்டபோது, அதன் முகம், காது, மூக்கு மற்றும் தலை முடி முழுவதும் ஈக்கள் முட்டையிட்டு வைத்திருந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.

அத்துடன் அந்த குழந்தையின் தலையில் ஒரு துவாரம் இருந்தது, அதன் வழியே குழந்தையின் மண்டை ஓடு தெரியும் அளவுக்கு அந்த துவாரம் ஆழமாக இருந்தது.

நீலம் பாரித்துப்போயிருந்த குழந்தையை மீட்ட மருத்துவர்கள், உடனடியாக அங்கேயே அந்த குழந்தைக்கு முதலுதவி செய்தனர்.

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அந்த பெண் குழந்தையின் நிலைமை சீராகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார் அந்த குழந்தையின் தாய் லீ (17) மற்றும் பாட்டி ஸாங் (46) ஆகியோரைக் கைது செய்தனர்.

தாங்கள் குழந்தையை குப்பையில் வீசியதை அந்த பெண்கள் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், ஏன் வீசினார்கள் என்பது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்