மைதானத்திற்குள் குப்புற விழுந்த ரஷ்ய ஜனாதிபதி புடின்.. வைரலாகும் வீடியோ

Report Print Basu in ஏனைய நாடுகள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஐஸ் சறுக்கு ஹாக்கி போட்டியில் சிவப்பு கம்பளம் தடுக்கி குப்புற விழுந்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

66 வயதான புடின், சோசியில் நடைபெற்ற கண்காட்சி ஐஸ் சறுக்கு ஹாக்கி போட்டியில் விளையாடினார். புடினுக்கு மைதானத்திற்குள் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

போட்டியில் விளையாடிய புடின் 8 கோல் அடித்து அசத்தினார். இறுதியில் புடினின் அணி 14-7 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றிப்பெற்றது. வெற்றியை ரசிகர்களுடன் பகிரும் வகையில் புடின் மைதானத்தில் சறுக்கிக்கொண்டே வலம் வந்தார். அப்போது அவருக்காக போடப்பட்டிருந்த சிவப்பு கம்பளம் தடுக்கி குப்புற விழுந்தார்.

இதனால், மைதானத்தில் சில நிமிடங்கள் பதற்றம் ஏற்பட்டது. எனினும், விழுந்தவுடன் எழுந்த புடின் ரசிகர்களை நோக்கி கை அசைத்த படி மைதானத்தை வலம் வந்தார். புடின் சிவப்பு கம்பளம் தடுக்கி விழுந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்