தரையிறக்கத்தின் போது ஏற்பட்ட கோளாறு.. சாதுரியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய விமானி!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

மியான்மரில் விமான தரையிறக்கத்தின் போது கோளாறு ஏற்பட்டபோது, சாதுரியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மியான்மர் நாட்டில் மாண்டலே நகருக்கு விமானம் ஒன்று, 89 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்தது.

தரையிறக்கத்தின் போது அந்த விமானத்தின் முன் பக்க Landing Gear திடீரென வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக விமானத்தின் முன் பக்க சக்கரம் வெளியே வரவில்லை. இரண்டு முறை முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. எனவே பின் பக்கம் இருக்கும் சக்கரங்கள் உதவியுடன் மட்டுமே தரை இறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனை அறிந்த விமானி உடனே துரிதமாக செயல்பட்டு, பின் பக்க சக்கரங்கள் மூலம் விமானத்தை தரையிறக்கினார்.

அதனைத் தொடர்ந்து, விமானம் தரை இறங்கியதும் பயணிகள் அனைவரும் எந்த வித பாதிப்பும் இன்றி பத்திரமாக வெளியேறினர்.

இந்நிலையில், சாதுரியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய குறித்த விமானிக்கு பாராட்டுக்கள் குவித்து வருகின்றன.

தரையிறங்கிய பின்னர் கோளாறான முன் பக்க சக்கரம் பழுது நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்