தேவாலயத்தில் துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

எகிப்து நாட்டில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதிகளால் இரண்டு பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எகிப்து நாட்டின் கெய்ரோ பகுதியில் தேவாலயம் அருகே உள்ள கடையில், 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இதில் 2 பேர் உயிரிழந்தனர். அதேபோல மர் மினா தேவாலய நுழைவாயிலில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 7 பொதுமக்கள் மற்றும் ஒரு பொலிஸார் கொல்லப்பட்டனர்.

பொலிஸார் திருப்பி நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி குண்டடிபட்டர். மேலும் இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களில் முக்கிய குற்றவாளிகள் 2 பேருக்கு மரண தண்டனையும், மற்ற 8 பேருக்கு மூன்று ஆண்டுகள் முதல் வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்