உலகின் அதிவேக புல்லட் ரயிலின் சோதனை ஓட்டம்.. சாதனை படைத்த ஜப்பான்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்
186Shares

உலகின் அதிவேகமான புல்லட் ரயில் நேற்று முன்தினம், ஜப்பான் நாட்டில் சோதனை அடிப்படையில் இயக்கி பார்க்கப்பட்டது.

ஜப்பான் அரசு ஷின்கான்சென் என்ற பெயரில் அதிவேக புல்லட் ரயில்களை இயக்கி வருகிறது. ஜப்பானில் உலகின் அதிவேகமான புல்லட் ரயிலை இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் ஆல்பா-எக்ஸ் புல்லட் ரயில் என்று பெயரிடப்பட்ட ரயில், நேற்று முன்தினம் வெள்ளோட்டம் விடப்பட்டது. அந்த ரயில் மணிக்கு 400 கிலோ மீற்றர் வேகத்தை எட்டி சாதனை புரிந்தது.

இந்த ஆல்பா எக்ஸ் புல்லட் ரயிலில் மிக நீளமான மூக்கு கொண்ட எஞ்ஜினும், 10 பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு சீனாவின் புல்லட் ரயில் மணிக்கு 390 கிலோ மீற்றர் வேகத்தில் இயக்கப்பட்டதே சாதனையாக இருந்த நிலையில், ஜப்பானின் புல்லட் ரயில் அதனை முறியடித்துள்ளது.

தற்போது ஜப்பானில் ஷின்கான்சென் வகை புல்லட் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 2020ஆம் ஆண்டில் ஷின்கான்சென் என்700எஸ் வகை புதிய புல்லட் ரயில்கள் அறிமுகமாகவுள்ளன.

வெள்ளோட்டம் விடப்பட்டு சோதனை செய்யப்பட்ட புல்லட் ரயில், 2030ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அப்போது இந்த ரயில் மணிக்கு 360 கிலோ மீற்றர் வேகத்தில் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

வரும் 2020ஆம் ஆண்டில் டோக்கியா நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. அந்த போட்டியையொட்டி இந்த ரயில்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்