ஸ்மார்ட் போன் வாங்க பாதை மாறும் கல்லூரி மாணவிகள் .. வெளிச்சத்திற்கு வந்த உண்மை

Report Print Basu in ஏனைய நாடுகள்
757Shares

சீனாவில் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவிகள் ஸ்மார்ட் போன் வாங்குவதற்காக தங்கள் கரு முட்டைகளைச் சட்டவிரோதமாக விற்றுவரும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கரு முட்டைகளின் வர்த்தகத்தைத் தடைசெய்வதில் சீனச் சட்டத்தில் இடம் இருந்தாலும், பெய்ஜிங்கில் சொந்த குழந்தை இல்லாத தம்பதியினரின் தேவை அதிகரித்து வருகிறதே இந்த நிலைக்கு காரணமாகும்.

கல்வியில் சிறந்து விளங்குபவர்கள், உயரமானவர்கள், அழகிய தோற்றமுடையவர்கள் அதிக விலைக்குத் தங்கள் கரு முட்டைகளை விற்கிறார்கள். சாதாரண மாணவிகள் ஒவ்வொரு கருமுட்டையையும் 100,000 யுவான் வரையிலான விலைக்கு விற்கின்றனர். சிலர் ஸ்மார்ட் போன் வாங்க கூட கரு முட்டையை விற்கின்றனர்.

சீனாவில் கரு முட்டைகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவை நன்கொடையாக மட்டுமே வழங்கப்படலாம். ஒற்றைப் பிள்ளை கொள்கை நீக்கப்பட்டது சட்டவிரோதமாக முட்டைகள் விற்கப்படுவதற்குக் காரணமாய் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்