நியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி! காரணம் என்ன?

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

‘டிராகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள 8 வயது சிறுமி ஒருவர், நியூசிலாந்து பிரதமருக்கு கடிதத்துடன் 5 டொலர்களையும் அனுப்பி வைத்தார்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு, கடிதத்துடன் கூடிய 5 நியூசிலாந்து டொலர்கள் அனுப்பப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில், தான் டிராகன்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், அதற்காக அரசு சார்பில் டிராகன் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து விக்டோரியா என்ற 8 வயது சிறுமி தான் அந்த கடிதத்தை அனுப்பியது தெரிய வந்தது. உடனே பிரதமர் ஜெசிந்தா சிறுமிக்கு பதில் கடிதம் எழுதி அனுப்பினார்.

அதில், ‘டிராகன்கள் மற்றும் உளவியல் குறித்த உங்களது ஆலோசனைகளை கேட்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது குறித்து எந்த பணிகளையும் நாங்கள் மேற்கொள்ள முடியவில்லை. நீங்கள் அளித்த லஞ்சத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதனால் அதை திருப்பி தந்துவிடுகிறேன். எனினும் டிராகன்கள் மற்றும் நுண்ணுணர்வு குறித்த உங்களது தேடல் சிறப்பாக தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.

Jason Alden/Bloomberg

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்