சில ஆண்டுகளாக மாதவிடாய் வரவில்லை.. வயிற்றுவலியால் துடித்த திருநங்கையை பரிசோதித்த போது அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
1224Shares

திருநங்கை ஒருவரை மருத்துவமனையில் ஆண் என தவறாக செவிலியர்கள் நினைத்த நிலையில் அவர் நிறைமாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் நடந்த நாடு குறித்த தகவல் வெளியாகவில்லை.

32 வயதான நபர் ஒருவருக்கு சில தினங்களுக்கு முன்னர் கடுமையான வயிற்று வலி இருந்த நிலையில் தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

அவர் குண்டாக இருப்பதை பார்த்த செவிலியர் அது சம்மந்தமான பிரச்சனையால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டிருக்கலாம் என நினைத்தார்.

பின்னர் தான் ஒரு திருநங்கை என அவர் கூறிய நிலையில் அவரின் முந்தைய மருத்துவ அறிக்கையை பார்த்த போது அதில் அவர் ஆண் என இருந்தது.

இதையடுத்து அந்த நபருக்கு பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டும் பிரச்சனைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

இறுதியில் அவருக்கு கர்ப்பத்துக்கான பரிசோதனை செய்த போது மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் அவர் நிறைமாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிசேரின் ஆப்ரேஷன் செய்யப்பட்ட நிலையில் குழந்தை இறந்தே பிறந்தது. இதன்பின்னர் அந்த திருநங்கையிடம் மருத்துவர்கள் அவர் உடல்நிலை குறித்து கேட்டனர்.

அவர் கூறுகையில், நான் பிறக்கும் போது பெண்ணாக பிறந்தேன், பின்னர் ஆணாக மாறுவதற்கான சிகிச்சைகளை சில காலமாக செய்து வந்தேன்.

சில ஆண்டுகளாக எனக்கு மாதவிடாய் வரவில்லை, எனக்கு கிடைக்கும் இன்சூரன்ஸ் பணம் சில காலமாக கிடைக்காததால் என்னால் தொடர்ந்து ஆணாக மாறும் சிகிச்சை மற்றும் ரத்த கொதிப்புக்கான சிகிச்சையை எடுத்து கொள்ளமுடியவில்லை என கூறினார்.

அந்த நபர் ஆணாக முழுவதுமாக மாற சரியான சிகிச்சையை எடுத்து கொள்ளாத காரணத்தாலேயே அவர் கர்ப்பமானது தெரியவந்துள்ளது.

இது குறித்து மருத்துவதுறையினர் கூறுகையில், திருநங்கைகளுக்கு பல்வேறு விதமான பிரச்சனைகள் உள்ளன.

மருத்துவ ரீதியாக அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம் என கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்