உலகளவில் அதிகளவு மது குடிப்பவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் தெரியுமா? வெளியான பட்டியல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

உலகளவில் அதிகளவு மது அருந்துபவர்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான ஆய்வு முடிவு நேற்று லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி சராசரியாக பிரித்தானியர்கள் வாரத்துக்கு ஒருமுறையாவது மது அருந்துவார்கள் என தெரியவந்துள்ளது.

அதாவது 51.1 தடவை வருடத்துக்கு மது அருந்துவார்கள். இந்த பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது அமெரிக்கா.

அங்கு 12 மாதத்தில் 50.3 தடவை மது அருந்துவார்கள் என தெரியவந்துள்ளது. லண்டனை சேர்ந்த ஆய்வாளர்கள் உலகளவில் 1,20,000 பேரிடம் இது தொடர்பான ஆய்வை நடத்தியுள்ளனர்.

பிரித்தானியா, ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்தில் மட்டும் 5400 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

சராசரியாக ஒரு ஆண்டில் அதிகளவு மது அருந்தும் நாடுகளின் டாப் 10 பட்டியல்,

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்