உயிருடன் புதைக்கப்பட்டிருந்த பிஞ்சுக் குழந்தை: காப்பாற்றிய ஹீரோ நாய்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தாய்லாந்து நகரம் ஒன்றில் மண்ணில் உயிருடன் புதைக்கப்பட்டிருந்த பிஞ்சுக் குழந்தை ஒன்றை மீட்டு ஹீரோவாகியிருக்கிறது ஒரு நாய்.

Ping Pong என்று அழைக்கப்படும் அந்த நாய், மண்ணில் எதையோ தோண்டுவதைக் கண்ட அதன் உரிமையாளரான Usa Nisaika (41) அங்கு சென்று பார்த்தபோது, ஒரு குழந்தையின் கால் மண்ணுக்குள்ளிருந்து எட்டிப்பார்ப்பதைக் கண்டிருக்கிறார்.

உடனடியாக அவர் அந்த இடத்தை தோண்ட, அங்கு பிறந்து சில மணி நேரமே ஆன ஒரு பிஞ்சுக் குழந்தை புதையுண்டிருப்பதைக் கண்டிருக்கிறார் அவர்.

உடனடியாக குழந்தையை அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, குழந்தை பிழைத்துக் கொண்டது.

அதிர்ஷ்டவசமாக 5.2பவுண்டுகள் எடையுள்ள அந்த குழந்தையின் உடலில் தீவிர காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயாகிய 15 வயது இளம்பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

தான் குழந்தை பெற்றது தெரிந்தால் தன் பெற்றோர் கோபித்துக் கொள்வார்கள் என்பதால் குழந்தையை புதைத்து விட்டதாக கூறினாள் அந்த பெண்.

ஆனால் அந்த குழந்தையை தாங்கள் வளர்ப்பதாக அவளது பெற்றோர் கூறியுள்ளனர்.

அந்த குழந்தையை காப்பாற்றி ஹீரோவாகியிருக்கும் Ping Pong என்று அழைக்கப்படும் அந்த நாய், சிறு வயதாக இருக்கும்போது, கார் விபத்து ஒன்றில் சிக்கி தனது கால்களில் ஒன்றை இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers