கணவர் என்னை ஏமாற்றியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது... அதிரவைத்த இளம் மனைவி.. நடந்தது என்ன?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சிங்கப்பூரை சேர்ந்த இளம்பெண் பிரபல பாடகரும் தனது கணவருமான அலீப் அசீஸிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ள நிலையில் அவர் தன்னை ஏமாற்றியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதாக கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் பிரபல நடிகர் மற்றும் பாடகராக இருப்பவர் அலீப் அசீஸ் (28). இவர் மனைவி பெல்லா (25). தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கணவரிடம் விவாகரத்து கோரி பெல்லா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், அலீப் எப்போதும் என்னை ஏமாற்றுவார், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது.

என்னை அவர் ஏமாற்றியதற்கான வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரம் என்னிடம் உள்ளது என கூறினார்.

ஏற்கனவே பெண் ஒருவருடன் அலீப் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் தனது மனைவியிடம் அது குறித்து அவர் மன்னிப்பு கேட்டார்.

இதோடு இரண்டு நடிகைகளுடன் அலீப்புக்கு தொடர்பு இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அலீப் மாதம் சிங்கப்பூர் டொலர் மதிப்பில் S$329 பணத்தை தனது மகன் செலவுக்கு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்