இந்தோனேஷியாவில் திட்டமிடப்பட்டிருந்த நவீன முறை ஐ.எஸ் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

இந்தோனேஷியாவில் நவீன முறையில் தாக்குதல் நடத்த இருந்த தீவிரவாதிகளின் திட்டத்தை பொலிசார் முறியடித்துள்ளனர்.

முதுகுப்பைகளில் நிரப்பப்பட்டுள்ள வெடி குண்டுகளை வைஃபை (WIFI) மூலம் வெடிக்கச் செய்ய ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்த நிலையில், இந்தோனேஷிய பொலிசார் வெடி குண்டுகளை தயாரிக்கும் திறமையுள்ள பலரை கைது செய்துள்ளனர்.

அடுத்த வாரத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கூட்டங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தும் திட்டங்கள் தீட்டியவர்கள் உட்பட ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பலரை இந்தோனேஷிய பொலிசார் நேற்று கைது செய்தனர்.

அரசியலில் நிலவும் பதற்றமான சூழலை பயன்படுத்தி கூட்டங்கள் நடக்கும் இடங்களில் குழப்பம் உண்டு பண்ணுவதற்காக வைஃபை மூலம் வெடிக்கச் செய்யப்படும் வெடி குண்டுகளை வெடிக்கச்செய்ய தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

கூட்டமாக இருக்கும் மக்களையும் பொலிசாரையும் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதால், வெளியில் நடமாடுவது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், மே மாதம் 22ஆம் திகதி யாரும் வெளியில் நடமாட வேண்டாம் என்று மக்களை பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மார்ச் மாதம் பொலிசார் கைது செய்ய முற்படும்போது தன்னையும் தன் குழந்தையையும் வெடிக்கச் செய்து உயிரிழந்த ஒரு தீவிரவாதியின் மனைவி உட்பட எட்டு பேர் பொலிசாருடன் நிகழ்ந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சிலர் வெடி குண்டுகளை செய்பவர்களில் நிபுணர்களும், சிரியாவில் ஜிகாதிகளுடன் இணைந்து போரிட்டவர்களும், உள்ளூரின் JAD என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் ஆவார்கள் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்