மந்திரவாதியை காதலிக்கும் இளவரசி: கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய நாட்டு மக்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

காதலை போற்றும் நார்வே நாட்டு மக்கள், தங்கள் இளவரசியின் காதலுக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

நார்வேயின் இளவரசி மார்தா லூயிஸ், தாம் ஒரு மந்திரவாதியை காதலிப்பதாக இன்ஸ்டாகிராம் மூலம் வெளிப்படுத்திய நிலையில்,

தங்களால் இளவரசியின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர் அங்குள்ள பொதுமக்கள்.

மந்திரவாதி டியூரெக் உடனான காதலை அடுத்து தமது கணவரை விவாகரத்து செய்துள்ளார் இளவரசி மார்தா.

வரம்பற்ற காதல் என்ன என்பது பற்றி தாம் டியூரெக்கினை சந்தித்த பின்னரே உணர்ந்து கொண்டதாக கூறும் 47 வயதான இளவரசி மார்தா,

தமக்காக மந்திரவாத தொழிலை விட்டுவிட்டு, முழு நேரமும் தம்மை டியூரெக் காதலித்து வருவதாகவும் அவர் பெருமையாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இளவரசி மார்தாவின் முடிவு தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறும் நார்வே மக்கள், இளவரசி உடனடியாக தமது பட்டத்தை துறக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள இளவரசி மார்தா, தமது வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை மேற்கொள்வது நாட்டு மக்களல்ல,

அவர்களுக்கு என முடிவுகளை கைவிட முடியாது எனவும் அழுத்தமாக பதில் அளித்துள்ளார்.

இளவரசி மார்தா கடந்த 2002 ஆம் ஆண்டு Ari Behn என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

2017-ல் திருமண முறிவுக்கு பின்னர் தற்போது கலிபோர்னியாவை சேர்ந்த 42 வயதான மந்துரவாதி டியூரெக் என்பவரை காதலித்து வருகிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்