ஈரான் - அமெரிக்க போர் பதற்றம்: நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மேலும் ஒரு நாடு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈரான் - அமெரிக்க போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் பஹ்ரைன் நாடு சொந்த நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில், ஈரான், ஈராக் சென்றுள்ள தங்கள் நாட்டவர்கள் உடனே அங்கிருந்து வெளியேறிவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான், ஈராக் செல்வதைத் தவிர்க்குமாறு தங்கள் நாட்டு குடிமக்களுக்கு பஹ்ரைன் அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கெனவே ஈரான், ஈராக் சென்றுள்ளவர்கள் அங்கிருந்து வெளியேறிவிடுமாறும், அமெரிக்காவின் நட்பு நாடான பஹ்ரைன் எச்சரித்துள்ளது.

பதற்றமான சூழ்நிலை, அச்சுறுத்தலுக்கான வாய்ப்புகள், ஆபத்தான போக்குகளை கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை வெளியிடப்படுவதாக பஹ்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக பாரசீக வளைகுடா பகுதிகளில் பயணிகள் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறி அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையம் தங்கள் நாட்டு விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers