ஊழல் செய்ததால் பதவி விலகிய துணைப்பிரதமர்.. வெடித்த போராட்டம்! திடீர் தேர்தல் அறிவிப்பு

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ஆஸ்திரியாவில் ஊழல் குற்றச்சாட்டு எதிரொலியாக துணைப் பிரதமர் பதவி விலகியதைத் தொடர்ந்து, பொதுத்தேர்தல் நடத்த அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் துணைப் பிரதமர் ஹெய்ன்ஸ் கிறிஸ்டியன் ஸ்ட்ராச்சி ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அவர் நாட்டின் அரசு ஒப்பந்தங்களை ஒதுக்கீடு செய்ததில் ஆதாயம் அடைந்தது உறுதியானதால், தனது துணைப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

எனினும், ஊழல் அரசை கலைக்க வேண்டும் என்றும், தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரி ஆஸ்திரியாவில் பெரும் போராட்டங்கள் வெடித்தன.

AFP

அதனைத் தொடர்ந்து, உடனே தேர்தல் நடத்துமாறு ஜனாதிபதி அலெக்ஸாண்டர் வான் டெர் பெல்லெனிடம் பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் பரிந்துரை செய்தார். இந்நிலையில், ஆஸ்திரியாவில் வரும் செப்டம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என்று ஜனாதிபதி அலெக்ஸாண்டர் வான் உத்தரவிட்டுள்ளார்.

ஆஸ்திரியாவில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வலதுசாரி மக்கள் கட்சியின் உறுப்பினரான பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Getty

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers