அன்று தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர்.. இன்று நாட்டின் ஜனாதிபதி! நடிப்பு உண்மையான அதிசயம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

உக்ரைன் நாட்டின் ஜனாதிபதியாக தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் விளாடிமிர் செலென்ஸ்கி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

ஐரோப்பிய நாடான உக்ரைனில் கடந்த மாதம் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பிரபல தொலைக்காட்சி நகைச்சுவை நடிகரான விளாடிமிர் செலென்ஸ்கி, யாரும் எதிர்பாராத விதமாக போட்டியிட்டார்.

சட்டம் படித்த இவர், க்வர்த்தால் 95 என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி திரைப்படங்கள், கார்ட்டூன்கள், தொலைக்காட்சி நகைச்சுவை தொடர்களை தயாரித்து வந்தார். அப்போது தான் ‘மக்கள் சேவகன்’ எனும் பொருள்படும் ‘Servant of the People' என்ற தொலைக்காட்சி தொடரை எடுத்தார்.

அதில் உக்ரைன் நாட்டின் ஜனாதிபதியாகவே நடித்தார். இத்தொடர் 2015 முதல் 2019 வரை ஒளிப்பரப்பானது. இந்த தொடருக்கு ஆதரவு பெருகி பிரபலம் அடைந்தது. அதன் பின்னர் விளாடிமிரின் நிறுவன பணியாளர்களே ஒரு அரசியல் கட்சியை தொடங்கினர்.

Hochu.ua

அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக விளாடிமிர் அறிவித்தார். ஆனால், அவருக்கு அரசியல் அனுபவம் சுத்தமாக கிடையாது என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. எனினும், தேர்தலில் போட்டியிடுவதாக விளாடிமிர் அறிவிப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பே வெளியான கருத்துக் கணிப்பில் அவருக்கு ஆதரவு அமோகமாக இருந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் நடந்த தேர்தலில் பலரும் ஆச்சரியப்படும் வகையில் விளாடிமிர் செலென்ஸ்கி 73.22 சதவித வாக்குகளுடன் வெற்றி பெற்று ஜனாதிபதியானார். இதன்மூலம் 3-4 மாதங்களில் ஒரு நாட்டின் நகைச்சுவை நடிகர் ஜனாதிபதியாகி சாதனை படைத்துள்ளார்.

Viacheslav Ratynskyi/Reuters

உக்ரைன் ஐரோப்பிய யூனியனிலும், நேட்டோவிலும் இணைய வேண்டும் என்று கூறி வந்த செலென்ஸ்கி, ஜனநாயகத்தை மதிக்கும் விதமாக, மக்கள் கருத்துக் கணிப்பில் இவற்றுக்கு ஆதரவு இருந்தால் தான் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

கீவில் உள்ள உக்ரேனிய நாடாளுமன்றத்தில் நடந்த எளிமையான பதவியேற்பு விழாவில், 41 வயதான செலென்ஸ்கி நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்