கலவர பூமியான சிறை... கைதிகளை கொன்று தள்ளிய ஐ.எஸ் தீவிரவாதிகள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தஜிகிஸ்தான் சிறையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் முன்னெடுத்த கலவரத்தில் 3 காவலர்கள் உட்பட 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தஜிகிஸ்தான் நாட்டில் வாக்தாத் பகுதியில் சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு ஐஎஸ் தீவிரவாதிகள் உட்பட பல கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு கைதிகளுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டு, கலவரமாக மாறியது. இந்த கலவரத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் முன்னெடுத்து நடத்தியுள்ளனர்.

இதில், சிறைக் காவலர்கள் 3 பேர் குத்திக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை அடுத்து பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி தாக்குதலில் 24 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

1500 பேர் சிறை வைக்கப்பட்டுள்ள இந்த சிறையில் கவலரம் ஏற்படுவது கடந்த 6 மாதங்களில் இது இரண்டாவது முறை என கூறப்படுகிறது.

கலவரத்தை வழி நடத்தியவர்களில் ஒருவர் 20 வயது இளைஞர் எனவும், அவரது தந்தை தஜிகிஸ்தான் சிறப்பு படையில் பணியாற்றி பின்னர் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் இயக்கத்துக்கு தலைமை தாங்கி வழி நடத்தியவர் எனவும் கூறப்படுகிறது.

இவர் 2017ம் ஆண்டு செப்டம்பரில் சுட்டுக்கொல்லப்பட்டார் என தஜிகிஸ்தான் சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் நடந்த கலவரத்தில் 2 காவலர்கள் உள்ளிட்ட 24 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்