மீண்டும் இந்தோனேஷியாவின் ஜனாதிபதியான ஜோகோ விடோடோ! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

இந்தோனேஷிய ஜனாதிபதி தேர்தலில் ஜோடோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக, தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 17ஆம் திகதி இந்தோனேஷியாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவடைய வாரக்கணக்கில் நீண்டது. இந்நிலையில் 57வயதான ஜோகோ விடோடா தேர்தலில் வெற்றி பெற்றதாக, அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோவிற்கு 44.5 சதவித வாக்குகள் கிடைத்த நிலையில், விடோடோ 55.5 சதவித வாக்குகளைப் பெற்று மீண்டும் இந்தோனேஷியாவின் ஜனாதிபதியாகியுள்ளார்.

AFP/Bay Ismoyo

முன்னதாக, தேர்தலில் மோசடி நடவடிக்கைகள் அதிகம் இடம்பெற்றதாக பிரபாவோ குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து, அவர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடும் என்றும், அவருடைய ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடும் என்றும் தகவல் வெளியானது.

ஆனாலும், அவருடைய ஆதரவாளர்களும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாத நிலையில், பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers