கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள்... அதிர்ச்சி தரும் வீடியோ-புகைப்படங்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

கடற்கரையோரம் ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் பிளாஸ்டிக் பைகள் இருப்பது தொடர்பான புகைப்படம் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இத்தாலியில் மிகவும் பிரபலமான சுற்றுலாவாசிகள் அதிகம் வரும் சுற்றுலாத்தலமான Sicily-வில் இருக்கும் Cefalu கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 7 வயது மதிக்கத்தக்க திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

அதன் பின் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அதன் வயிற்றை சோதித்த போது, வயிறு முழுவதிலும் பிளாஸ்டிக் பைகள் நிரம்பி கிடந்துள்ளன.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

மேலும் அதில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் ஐந்து திமிங்கலங்கள் பரிதாபமாக இறந்துள்ளன. அதன் வயிற்றில் பிளாஸ்டிக் பைகள் இருந்துள்ளன.

நாம் எந்த நிலையில் இருக்கிறோம், கடலை எப்படி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரி Carmelo Isgro, அதன் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ததுடன், அதன் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் பைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன் எனவும், நிச்சியமாக அந்த திமிங்கலம் பிளாஸ்டிக் பைகள் காரணமாகத் தான் இறந்ததா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை, அதற்கான முடிவு விரைவில், இனிமேலாவது தம்மால் முடிந்த அளவிற்கு கடலை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்