ரஷ்ய ஜனாதிபதி புடினின் காதலிக்கு இரட்டைக் குழந்தைகள்?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நீண்ட நாள் காதலி என அழைக்கப்படும் பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விளாடிமிர் புடினின் காதலி என அழைக்கப்படும் முன்னாள் ஜினாஸ்டிக் வீராங்கனை Alina Kabaeva சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுத்துள்ளதாக மாஸ்கோ பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

ஆனால் Alina தரப்பிலிருந்தோ கிரெம்ளின் மாளிகையிலிருந்தோ இது குறித்து வழக்கம் போல எந்த செய்தியும் வெளியாகவில்லை.

36 வயதான Alinaவுக்கு நெருக்கமான ஒருவர், வதந்திகளுக்கெல்லாம் நாங்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்றார்.

ஆனால் Alinaவின் பிரசவத்திற்காக பிரபல மகப்பேறு மருத்துவமனையின் ஒரு VIP தளம் முழுவதுமே காலி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை வெளியிட்ட பிரபல பத்திரிகை ஒன்றிற்கு சொந்தமான இணையதளம் உடனடியாக அதை அகற்றிவிட்டது.

மற்றொரு இணையதளம், Alina இரட்டைக் குழந்தைகளை பிரசவித்து விட்டு மாயமானார் என்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதுபோக Sergei Kanev என்னும் ரஷ்ய உளவுத்துறைக்கு நெருக்கமான தனியார் பத்திரிகையாளர் ஒருவர், Alina சிசேரியன் அறுவை சிகிச்சை முறையில் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்ததாக பதிவிட்டிருந்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers