தனக்கு உணவு கொடுத்தவர் இறந்தது தெரியாமல் தினமும் வகுப்பறைக்கு வரும் தெரு நாய்! கண்கலங்க வைக்கும் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்சில் தனக்கு தினமும் உணவு கொடுத்து வந்த நபர் கடந்த சில தினங்களாக காணாத நிலையில், அவரை பார்ப்பதற்காக வகுப்பறை முன்பு நாய் ஒன்று நிற்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பார்போர் நெஞ்சை கரைய வைக்கிறது.

பிலிப்பைன்சின் Pampanga-வில் இருக்கும் Mabalacat City கல்லூரியில் ஆசிரியராக இருப்பவர் Carmelito.

58 வயதான இவர் அங்கிருக்கும் தெரு நாய் ஒன்றிற்கு காலையில் வரும் போது டிபன், மதிய வேளையில் ஸ்நாக்ஸ் போன்றவை கொடுத்து வந்துள்ளார்.

அவரிடம் சாப்பிட்டவுடன் அந்த நாய் அங்கிருக்கும் கேம்பஸ் அருகிலோ அல்லது அங்கிருக்கும் சாலையிலோ தூங்கிவிடுமாம்.

இப்படி அந்த நாய்க்கு இவர் இரண்டு ஆண்டுகளாக இப்படி சாப்பாடு கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினனங்களாக Carmelito கல்லூரிக்கு வருவதை அந்த நாயால் காணமுடியவில்லை.

ஏனெனில் அவர் இந்த மாதத்தின் துவக்கத்தில் பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதன் பின் கடந்த 18-ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இது தெரியாமல் அந்த நாயோ அவரை காணவில்லை என்று கடந்த இரண்டு வாரமாக வகுப்பறையின் முன்னே வந்து நிற்பதும், அவரை எதிர்பார்ப்பதும் போன்று இருந்துள்ளது.

இதைக் கண்ட அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக அவரிடன் புகைப்படம் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரின் புகைப்படத்தைக் கண்டு அந்த நாய் தொட்டு பார்த்ததாக கூறப்படுகிறது.

நாயின் இந்த செயலைக் கண்ட அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளனர். தற்போது அந்த நாய்க்கு தேவையான உணவு மற்றும் இருக்க தகுந்த இருப்பிடம் அமைக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்