தினம்தோறும் நள்ளிரவில் கேட்ட விசித்திர சத்தம்: சுவற்றை உடைத்த தம்பதிக்கு காத்திருந்த ஆச்சர்யம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு வீட்டில், 80000 தேனீக்கள் சேர்ந்து ஒரு பெரிய கூட்டையே கட்டியிருந்துள்ளன.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத ஒரு தம்பதியினர், தினமும் நள்ளிரவில் உறங்க முடியாமல் பெரும் அவஸ்தையடைந்துள்ளனர்.

கண்டுபிடிக்க முடியாத ஒரு விசித்திர சத்தம் ஒன்று உறங்க விடாமல் செய்துள்ளது. அதனை கண்டுபிடிக்க முடியாமல் தம்பதியினர் திணறியிருக்கின்றனர்.

இறுதியாக அவர்கள் உறங்கிக்கொண்டிருந்த இடத்தின் சுவர்கள் ஆராயப்பட்டபோது தான் அவர்களுக்கு பெரும் ஆச்சர்யம் காத்திருந்துள்ளது.

அந்த சுவற்றில் 80000 தேனீக்களுடன், மிகப்பெரிய தேன் கூடு ஒன்று இருந்துள்ளது. தேனீக்களை பத்திரமாக அகற்றிவிட்டு, தேன் கூடு முழுவதையும் அழித்த ஒரு உள்ளூர் தேனீக்காளரான செர்ஜியோ குர்ரெரோ கூறுகையில், கிட்டத்தட்ட அந்த படுக்கையறை முழுவதும் தேனீக்கள் பரவியிருந்தன.

இந்த பெரியளவிலான தேனீக்களுக்கு மத்தியில் அந்த தம்பதியினர் எப்படி வாழ்ந்தார்கள் என்பது எனக்கு புரியவில்லை. எந்த பிரச்சினையும் இல்லாமல், இதனை அழித்து முடிக்க எங்களுக்கு 7 மணி நேரம் ஆனது என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்