முகம் சுழிக்க வைத்த ஒற்றைப் புகைப்படம்: பதவியை இழந்த பெண் நீதிபதி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் பெண் நீதிபதி ஒருவரின் நிர்வாண புகைப்படம் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்த நிலையில், அவர் தமது பதவியை இழக்க நேர்ந்துள்ளது.

தமது மொபைல் போன் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டது எனவும், இதனால் தமது அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டது எனவும் இந்த விவகாரம் தொடர்பில் நீதிபதி இரினா தேவயெவா தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நடந்த இந்த விவகாரம் தொடர்பில், அவரே முன்வந்து தமது பதவியை துறந்ததாக மாஸ்க்கோ நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவரை கட்டாயப்படுத்தி மாவட்ட நீதிமன்ற நிர்வாகிகள் பதவி துறக்க வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், தேவயெவா நீதிபதியாக பொறுப்பேற்கும் முன்னரே, கடந்த 2016 ஆம் ஆண்டு அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது எனவும், தேவயெவா அந்த புகைப்படத்தை வேறெங்கும் பகிர்ந்ததில்லை எனவும், ஆனால் அவரது மொபைலை ஹேக் செய்து விஷமிகள் வெளியிட்டுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018 ஆகஸ்டு மாதம், தீவிரவாத அமைப்பை சேர்ந்த இரு இளைஞர்கள் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு வெளியிட்ட பின்னரே அவருக்கு இதுபோன்ற சிக்கல்கள் தொடர்வாதகவும் கூறப்படுகிறது.

நேர்மையான ஒரு நீதிபதியை சட்டவிரோத கும்பல் ஒன்று திட்டமிட்டு அவரது பதவியை துறக்க வைத்ததாக சமூக வலைதளத்தில் பலர் பதிவிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்