10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பம்... சிக்கிய அவரின் நெருங்கிய உறவினர்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் 10 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரின் நெருங்கிய உறவினரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் உள்ள ஒரு இடத்தில் கடந்த வாரம் 10 வயது சிறுமியின் சடலத்தை பொலிசார் கைப்பற்றினார்கள்.

விசாரணையில் சிறுமியின் பெயர் பரிஸ்டா எனவும் அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் தெரியவந்தது.

முதலில் பரிஸ்டாவின் குடும்பத்தாரும் உறவினர்களும் அவரின் சடலத்துக்கு இறுதிச்சடங்கு செய்ய மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.

சிறுமியை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரினார்கள்.

இதற்கு பொலிசார் உறுதியளித்த நிலையில் சிறுமியின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடந்தது.

இந்த வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை பொலிசார் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமி பரிஸ்டாவின் நெருங்கிய உறவினர் ஒருவரை பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கு தொடர்பான உண்மை நிலவரம் விரைவில் வெளியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்