கிராமம் முழுவதும் அழுகிய சடலங்கள்: பார்வையிட குவியும் சுற்றுலாப்பயணிகள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள இருண்ட சுற்றுலாத் தளத்தை பார்வையிடுவதற்காக வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பாலி தீவின் வடக்கே ட்ருன்யான் பகுதியில் உள்ள கிராமத்தை பார்வையிடுவதற்காக சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.

இந்த கிராமத்தில் பழையகால முறையை பின்பற்றும் விதமாக, இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது கிடையாது.

அதற்கு மாறாக இறந்தவர்களிடன் உடல்களை மூங்கில் கூண்டுகளுக்கு நடுவே ஓய்வெடுக்க வைத்துவிடுவார்கள். இந்தோனேசிய வெப்பத்தில் அந்த உடல்கள் சிதைந்துவிடும்.

சதைகள் அனைத்தும் உதிர்ந்த பின்னர், எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகள் கைப்பற்றப்பட்டு, ஒரு பெரிய மரத்தின் அடியில் வைக்கப்படும். அந்த மரம் 1000 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது.

Batur ஏரியை கடந்து சென்றால் மட்டும் இந்த தீவினை பார்வையாளர்கள் அடைய முடியும்.

திருமணமானவர்கள் மட்டுமே இந்த சவ அடக்கத்தின் மூலம் மரியாதையை செய்யப்படுகிறார்கள். மற்றவர்கள் நிலத்திற்கடியில் புதைக்கப்படுகிறார்கள். இது ட்ரூனியனில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.

அவர்களை சுற்றிலும் வைக்கப்படும் மூங்கில் கூண்டுகளானது, உணவை தேடும் மிருகங்களிடம் இருந்து பாதுகாப்பதற்கு பயன்படுகிறது.

இறுதிச் சடங்கின் போது சடலத்தை சுத்தம் செய்வது, ஆடை மாற்றுவது என அனைத்துமே ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்கிற கடுமையான விதி அங்கு உள்ளது.

கல்லறைக்கு எடுத்து செல்லப்படும்போது பெண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் மற்ற சமயங்களில் செல்வதற்கு அனுமதி உண்டு.

பெண்கள் தங்களுடைய பிரசவ காலத்தில் கல்லறைக்கு சென்றால் பூகம்பம் அல்லது எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது.

இவற்றை காண்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுப்பயணிகள் வந்து செல்கின்றனர். அதிலும் அவுஸ்திரேலிய சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers