அமெரிக்கா உடனான உறவில் பின்னடைவு: வட கொரிய முக்கிய அரசு அதிகாரிக்கு மரண தண்டனை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புடனான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பில் உடன்பாடு ஏற்படாததால் கோபத்துக்குள்ளான வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தமது முக்கிய அதிகாரிக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புடனான வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது சந்திப்பானது வியட்நாம் நாட்டில் நடைபெற்றது.

இந்த சந்திப்பானது சில காரணங்களால் தோல்வியில் முடியவே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சந்திப்பின் பாதியிலேயே விடைபெற்று சென்றுள்ளார்.

இந்த விவகாரம் வட கொரியாவை பொறுத்தமட்டில் கடும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய பொறுப்பேற்று செயல்பட்டவர் Kim Hyok-chol என்ற வடகொரிய அதிகாரியாகும்.

வியட்நாமில் நடந்த இச்சந்திப்பு தோல்வில் முடிவடைந்ததால் Kim Hyok-chol மீதும் அவருக்கு உதவியாக இருந்த நால்வர் மீதும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

இந்த விசாரணையில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபணமானதால் Kim Hyok-chol-கு மரண தண்டனையும், எஞ்சிய நால்வருக்கு சிறை தண்டனையும் விதித்து வடகொரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

மட்டுமின்றி, வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்த கருத்துக்களை உரியமுறையில் மொழிபெயர்க்க தவறியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கிம் ஜாங் உன் தமது சகோதரியிடமும், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டாம் என விலக்கியுள்ளார்.

இவரும் டொனால்டு டிரம்புடனான சந்திப்பின் போது உடன் இருந்தவர். இதனிடையே, வடகொரியாவின் முக்கிய அரசு அதிகாரிகள் நால்வர் அமெரிக்காவுக்கு தகவல்களை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாகவும்,

இதன்பொருட்டே விசாரணை மேற்கொள்ளப்பட்டது எனவும் தென் கொரிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்