ரஷ்யாவில் பயங்கர வெடிவிபத்து... 22 பேர் சிக்கினர்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 22 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Dzerzhinsk நகரில் உள்ள கிறிஸ்டல் ஆலையில் ட்ரொட்டிலின் உற்பத்தி தொழிற்சாலையில் இந்த வெடிவிபத்து நடந்துள்ளது. இதில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொழிற்சாலையில் மொத்தம் மூன்று முறை வெடி பொருட்கள் வெடித்துள்ளது. இதில் தொழிற்சாலையை சுற்றி 100 மீட்டர் முற்றிலும் சேதமடைந்துள்ளது. தீ அருகில் உள்ள அடுக்குமாடிக்கு பரவி வீடுகளும் சேதமடைந்துள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப செயல்முறையில் ஏற்பட்ட தவறு காரணமாகவே வெடி விபத்து ஏற்பட காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்தை அடுத்து தொழிற்சாலையில் இருந்து ஊழியர்கள் உடனே வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers