ரஷ்யாவில் சர்ச்சைக்குள்ளான நிருபர் கைது விடயத்தில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் அதிரடி நடடிவக்கை மேற்கொண்டுள்ளார்.
கடந்த வாரம், 36 வயதான இவன் கொலுனோவ் என்ற நிருபர் ரஷ்ய பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து போதைப் பொருள் கண்டறியப்பட்டதாக பொலிசார் குற்றம்சாட்டினர்.
கொலுனோவ் கைது செய்யப்பட்டதிற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொலுனோவ் ஊழல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருவதால் அவரை ஒடுக்கும் நோக்கில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வெளிப்படையாக கூறினர்.
நாட்டில் இப்பிரச்சினை சர்ச்சையை கிளப்பியதை அடுத்து, கொலுனோவ் மீது பதியப்பட்ட வழக்குகளை கைவிட்ட பொலிசார், அவரை விடுவித்தனர். விடுதலையான கொலுனோவை அந்நாட்டு மக்கள் வரவேற்றனர்.
இந்நிலையில், கொலுனோவை மதிப்பிழக்கும் வகையில் அவர் மீது குற்றவியல் வழக்கு போட்ட இரண்டு பொலிஸ் ஜெனரல்களை பணிநீக்கம் செய்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.