கூரையின் மேலிருந்து ஒரு வயது மகளை தூக்கி எறிந்த தந்தை: அதிர்ச்சியில் உறைந்த பொலிஸ்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்
488Shares

தென் ஆப்பிரிக்காவில் மக்கள் போராட்டத்தின் போது சொந்த மகளை கொலை செய்ய துணிந்த தந்தையை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் குவாட்வேசியிலுள்ள ஜோ ஸ்லோவோ நகரில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட 90 வீடுகளை இடிக்குமாறு கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 12 ம் திகதியன்று உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், வீடுகளை இடித்துக்கொண்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த பொதுமக்கள் பலரும், கற்களை எரிந்தும், டயர்களை சாலையில் தீயிட்டு கொளுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது 38 வயதான ஒருவர் தன்னுடைய ஒரு வயது மகளை தூக்கிக்கொண்டு கூரையின் மேல் பகுதிக்கு சென்றார்.

இங்கிருந்து பொலிஸார் உடனடியாக வெளியற விட்டால், என்னுடைய மகளை கீழே தூக்கி எறிந்துவிடுவேன் என மிரட்டல் விடுத்தார்.

ஆனால் பொலிஸார் அங்கிருந்து வெளியற மறுத்து, மீட்பு பணியில் ஈடுபட ஆரம்பித்தனர். மறுபுறம் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், "தூக்கி எறி" என கோஷமிட ஆரம்பித்தனர்.

அப்போது ஒரு பொலிஸார் மட்டும் கூரையின் மேல்பகுதிக்கு சென்ற காப்பாற்ற முயன்றார். ஆனால் அதற்குள் அந்த நபர் குழந்தையை மேலிருந்த தூக்கி எறிந்துவிட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் ஓடிச்சென்று லாவகமாக குழந்தையை கையில் பிடித்து காப்பாற்றினார். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் குழந்தை எந்தவித காயமும் இல்லாமல் தப்பியது.

அந்த குழந்தையினை அவரது 35 வயது தாயிடம் பத்திரமாக ஒப்படைத்த பொலிஸார், சொந்த மகளையே கொல்ல துணிந்த தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இன்று நடந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையில், குழந்தையின் தந்தைக்கு 5 வருட சிறைத்தண்டனை ரத்து செய்யப்பட்டு, 5,000 ரேண்ட் (£ 264.90) மட்டும் அபராதமாக விதிக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பிற்கு இணையதளவாசிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்