கடுமையான வயிற்றுவலியால் துடித்த பெண்: கற்குவியலை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்
240Shares

சீனாவில் கடுமையான அடிவயிற்று வழியால் அவஸ்தையடைந்த பெண்ணின் பித்தப்பையிலிருந்து 7,750 கற்கள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளன.

சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 7 வருடங்களுக்கு முன் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது பித்தப்பையில் சில கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

ஆனால் அவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்ததால் அப்போதைக்கு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அடிவயிற்றில் கடுமையான வலி இருப்பதாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில், வயிற்றில் ஏராளமான கற்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியைடைந்துள்ளனர்.

உடனடியா மருத்துவர் ஷென் ஜாங்கிய் தலைமையிலான குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டு 7750 கற்களையும் வெளியில் எடுத்தது.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு நோயாளியின் வயிற்றில் அதிக கற்கள் இருப்பதை இப்பொழுது தான் முதன்முறையாக பார்க்கிறேன்.

உள்ளிருந்த சிறிய கற்கள் இன்னும் பெரிதாக இருந்திருந்தால், மஞ்சள் காமாலை மற்றும் கடுமையான கணைய அழற்சி போன்ற போன்ற தீவிரமான நோய்கள் உருவாகியிருக்கலாம்.

பித்தப்பைகளில் உருவாகும் கற்கள், பொதுவாக கொழுப்பு படிகங்களால் தயாரிக்கப்படுகின்றன. அதிக எடையுள்ள மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள், குறிப்பாக பெண்கள், பித்தப்பை நோய்களினால் பாதிக்கப்படுகின்றனர்.

உணவு குறைப்பு மற்றும் எடை இழப்பு அறுவை சிகிச்சைசெய்வது இதற்கு வழிவகுக்கும். அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண், தண்ணீர் அருந்துவதையும், காலை உணவு எடுத்துக்கொள்வதையும் தவிர்த்து வந்துள்ளார்.

அதன்காரணமாகவே கற்கள் அதிகரித்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்